பலகை

ஓகஸ்ட் 12, 2006

சமுதாயப் பொறியாளர்கள்

சமீபத்தில் பெட்டிக்கடைகளில் கவனித்த பத்திரிக்கை தலைப்புச் செய்தி ஒன்று (அப்படியே தரவில்லை இங்கு – ஓரளவு முடிந்த வரை ஞாபகத்தில் இருந்து தந்துள்ளேன்):
“தாலி கட்டிக்கொள்ள விரும்பும் வயசுப் பையன்கள் – தமிழகத்தை உலுக்கும் ஹோமோ செக்ஸ் பிரச்னை”

அதே போல் அரசுப் பேருந்து ஒன்றின் பின்னால் ஒட்டப் பட்ட்டிருந்த ஒரு எய்ட்ஸ் குறித்த ஒரு அரசு பிரச்சாரம் –
“விபச்சாரத்தை நாடிப் போகாதே! அது வெட்கக் கேடான செயல்!”

கடைசியாக ஒரு விஷயம்: சமீபத்தில் வெளியான “உயிர்” படத்தில் நடித்து இப்போது எல்லாராலும் பேசி அலசப்படும் சங்கீதாவின் பேட்டியை குமுதத்திலோ ஆனந்த விகடனிலோ படித்தேன். அதில் பேட்டி கண்டவர் இப்படிப்பட்ட கேவலமான பாத்திரத்தில் நடிக்க எப்படி அவர் முன் வந்தார் என்று கேட்க, அதற்கு அவரும் இப்படிப்பட்ட சமூக அவலங்கள் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த இப்படி நடித்ததாக குறிப்பிட்டார்.

பத்திரிக்கைகள் பொதுவாக செய்திகளை மக்களுக்கு தந்து அவர்களே எது நல்லது, எது இல்லை என்று முடிவு செய்ய விட வேண்டுமே தவிர, தங்கள் கருத்துக்கள் மூலம் அவற்றை மக்களுக்கு அவர்களே கற்பிக்கக்கூடது என்று தோன்றுகிறது.

Advertisements

Create a free website or blog at WordPress.com.